அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அசாம் தேசிய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி,
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
நவம்பர் தொடங்கி கடந்த 8 நாள்களில் மாவட்டத்தில் மொத்தம் 400 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
படிக்க: அனுபவம் இல்லையெனில் அரசு வேலை இல்லை: முதல்வர் சாவந்த்
மாநிலத்தின் மற்ற பகுதிகளில் 2 பேருக்கு டெங்கு பதிவாகியுள்ள நிலையில், இதுவரை அசாமில் மொத்த டெங்கு பாதிப்பு 427 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் மாநிலத்தில் இதுவரை டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிண்கை 3 ஆக அதிகரித்துள்ளது.