இந்தியா

இசைக்கலைஞர் அருணா சாய்ராமுக்கு ’செவாலியே’ விருது

1st Nov 2022 05:48 PM

ADVERTISEMENT

 

பிரபல கர்நாடக பாடகர் அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளரான அருணா சாய்ராமுக்கு(70) பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளாரகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாதெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

Tags : aruna sairam
ADVERTISEMENT
ADVERTISEMENT