இந்தியா

இந்தூர் - சண்டீகர் இடையே நேரடி விமானச் சேவை தொடக்கம்!

1st Nov 2022 03:20 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: உள்நாட்டு இணைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்குப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இண்டிகோ நிறுவனம் இந்தூர்-சண்டீகர் இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. 

இன்று நடைபெற்ற விழாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இந்தூரைச் சேர்ந்த  பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில், 

ADVERTISEMENT

இந்தூர் மற்றும் சண்டீகர் இரண்டு ஸ்மார்ட் நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. கட்டாயம் பார்க்க வேண்டிய பல சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளன. 

வரலாறு, வளர்ச்சி மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றைப் பெருமைப்படுத்தும் பிராந்தியத்தின் மையத்தில் இருப்பதால் இந்தூர் இந்தியாவின் இதயப் பகுதியாகும். இது மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாகும். இது இயற்கையின் தனித்துவமான ஒருங்கிணைப்பு, வரலாற்று மற்றும் சமகால கட்டமைப்புகள் அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுள்ளது. 

மறுபுறம், சண்டீகர் பிரெஞ்சு கட்டடக் கலைஞர் லு.கார்பூசியரால் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் நவீன நகரங்களில் ஒன்றாகும். சண்டி மந்திர் கோயிலின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்பட்டது. மேலும், சண்டீகர் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுகிறது என்றார். 

படிக்க: நெல்லையில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்!

இண்டிகோவின் தலைமை அதிகாரி சஞ்சய் குமார் கூறுகையில், 

எங்கள் நோக்கத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு இணைப்பை வலுப்படுத்த இந்தூர்-சண்டீகர் இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்கியுள்ளோம். 

புதிய விமானங்களின் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விருப்பங்களையும் வழங்கும். இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரம் மற்றும் சண்டீகர் மிகவும் நன்கு திட்டமிடப்பட்ட நகரமாகும். இவை இரண்டும் பார்வையிட வேண்டிய இடங்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல் கலாசாரம் மற்றும் உணவு அனுபவங்களையும் வழங்க நிறைய உள்ளன. 

சரியான நேரத்தில், மலிவு பயண அனுபவம் என்ற எங்கள் வாக்குறுதியை நாங்கள் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றார் அவர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT