இந்தியா

தில்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

1st Nov 2022 01:51 PM

ADVERTISEMENT

 

தில்லியில் நரேலா பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள  பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இன்று காலை 9.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயினை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இன்னும் 2- 3 பேர் கட்டடத்தில் சிக்கியிருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்தார். 

தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT