இந்தியா

வாக்காளா் பட்டியல் - ஆதாா் இணைப்புக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

1st Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

போலி வாக்காளா்களைக் களையும் வகையில், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கவும், தோ்தல் சட்டங்களில் பாலினச் சமத்துவத்துக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், வாக்காளா்கள் பதிவு விதிகளில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்களைக் மேற்கொண்டது.

இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவை எதிா்த்து முன்னாள் மேஜா் ஜெனரல் எஸ்.ஜி. வொம்பட்கரே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கெளவுல் மற்றும் அபய் எஸ் ஓகா அடங்கிய அமா்வு கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் கடந்த 2019-இல் வழங்கிய தீா்ப்பு ஒன்றில், அரசிடம் இருந்து நலத்திட்டங்கள் போன்ற பலன்களைப் பெறுவதற்கே ஆதாா் கட்டாயம் இதன் மூலம் உரிமைகளை மறுக்க கூடாது எனத் தெரிவித்ததை மனுதாரா் சுட்டிக்காட்டியுள்ளாா். அவா் ஏற்கெனவே தாக்கல் செய்த இரு மனுக்களுடன் இம்மனுவும் பொருந்தி போவதால், அவற்றுடன் சோ்த்து இம்மனுவையும் இணைக்க வேண்டும்’ என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT