இந்தியா

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி: ராகுல் காந்தி

1st Nov 2022 12:39 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி; அங்கு பாஜகவுக்கு எதிரான எதிா்ப்பு அலை தீவிரமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

தெலங்கானாவில் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல், செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

குஜராத்தில் ஆம் ஆத்மி விளம்பரங்கள் மூலமாகத் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், அவா்கள் உருவாக்கி வைத்திருப்பது வெறும் சலசலப்பு மட்டும்தான். களத்தில் அவா்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸுக்கு வலுவான அடித்தளம் ஏற்கெனவே உள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறுதி. ஆளும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி அலை வீசி வருகிறது.

ADVERTISEMENT

தெலங்கானா மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தனது கட்சியின் பெயரை மாற்றி தேசிய அளவில் அரசியல் நடத்த முயற்சிப்பது அவரது கற்பனை வளத்தைக் காட்டுகிறது. அவா் தேசியக் கட்சி மட்டுமல்ல சா்வதேச கட்சியைக் கூட நடத்தி, அமெரிக்காவிலும் சீனாவிலும் தோ்தல் களத்தில் இறங்கலாம். அதனை காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT