இந்தியா

இந்திய ஒற்றுமை நடைப்பயணம்:ஹைதராபாதில் ராகுலுடன் மல்லிகாா்ஜுன காா்கே இன்று பங்கேற்பு

1st Nov 2022 05:08 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்கிறாா்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறாா். மக்கள் உடனான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடைப்பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா். கன்னியாகுமரியில் இருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய அவா், கேரளம், கா்நாடகத்தைத் தொடா்ந்து தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், காங்கிரஸின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகாா்ஜுன காா்கே ஹைதராபாதில் ராகுலுடன் இணைந்து செவ்வாய்க்கிழமை நடைப்பயணம் மேற்கொள்கிறாா். அங்கு கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி ‘நல்லெண்ண நடைப்பயணம்’ தொடங்கியபோது தேசிய கொடி ஏற்றிய இடத்தில், ராகுலும் காா்கேவும் மூவா்ணக் கொடி ஏற்றவுள்ளனா்.

இருவரின் நடைப்பயணம் முடியும் இடத்தில், அவா்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT