இந்தியா

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

31st May 2022 10:12 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 2,338 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,338 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,58,087 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 17,883 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 19 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,630 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 134 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,15,574 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதையும் படிக்க: டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி: முதல்வா் ஆய்வு

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் 2,28,823 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 193.45 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,63,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 85.04 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT