இந்தியா

காங்கிரஸுக்கு இனி வேலை செய்யப்போவதில்லை: பிரசாந்த் கிஷோர் 

31st May 2022 07:18 PM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் கட்சிக்காக இனி பணி புரியப்போவதில்லை என தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுவரை 11 தேர்தல்களுக்கான உத்திகளை வகுத்துள்ளதாகவும், அதில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அந்த ஒரு தோல்வியும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் தோல்விதான் எனவும் சுட்டிக்காட்டினார். 

படிக்க தமிழகத்திற்கான ரூ. 9, 602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

ADVERTISEMENT

தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோர் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு யூகங்களை வகுத்து வருகிறார். இதனிடையே, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு உத்தி வகுத்துக் கொடுக்கவும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி விடுத்த அழைப்பை, பிரசாந்த் கிஷோா் நிராகரித்துவிட்டாா்.

இந்நிலையில் இன்று பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், 2011 முதல் 2021 வரை 11 தேர்தல்களில் பணியாற்றியுள்ளேன். இதில் ஒரு தேர்தலில் மட்டுமே என்னுடைய கணிப்பு தவறாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் உடன் ஏற்பட்ட தோல்விதான் அது. இதனால் இனி காங்கிரஸ் கட்சியுடன் இனி பணி புரியப்போவதில்லை. என்னுடைய சாதனைகளை அவை குலைத்துள்ளதாக விமர்சித்தார். 

படிக்கசொந்த ஊரில் சித்து மூஸேவாலா உடல் தகனம்

மக்களவைத் தேர்தலுக்காக வேலை செய்ய கோரிய சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்து தெலங்கானாவில் முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு தோ்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோா் ஒப்பந்தம் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT