இந்தியா

சித்து மூஸேவாலா இறப்பிற்கு பாகிஸ்தான் பாடகர் இரங்கல்

31st May 2022 01:38 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தான் பாடகர் பிலால் சயீத் சித்து மூஸேவாலா இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் பிரபல பாடகராக இருந்தவா் சித்து மூஸேவாலா. இவா் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். கடந்த சனிக்கிழமை அவா் உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில காவல் துறை திரும்பப் பெற்றது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டத்தில் சித்து மூஸேவாலாவை அடையாளம் தெரியாத நபா்கள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா். 

பாகிஸ்தான் பாடகர் பிலால் சயீத் கூறியதாவது: 

ADVERTISEMENT

நான் எப்போதும் உங்களை தங்களின் முதல் பாடல் ‘ஸோ அய்’ என்ற பாடலின் மூலமே நியாபகம் வைத்துள்ளேன். உண்மையான கலைஞன். டெசி மியூசிக்கில் நீங்கள் ஒரு புரட்சியாளர். அசலான படைப்புகளை படைத்த அங்களது பாடல்கள் அசலாக இருக்கும்படி ஊக்கமூட்டியுள்ளது. நமது தொலைப்பேசி உரையாடலில் நீங்கள் மிகவும் தன்மையாக பேசியதை நியாபகம் வைத்துள்ளேன். உங்கள் மீதான எனது மரியாதை எப்போதுமிருக்கும். உங்களது இசையும் எங்களுடன் எப்போதுமிருக்கும். நீங்கள் ஒரு லெஜண்ட்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT