இந்தியா

பத்ம விருதுகள் 2023-க்கான பரிந்துரைகள் வரவேற்பு: மத்திய அரசு

31st May 2022 10:52 AM

ADVERTISEMENT

புது தில்லி: 2023-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, பொது சேவை, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: உ.பி.: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT