இந்தியா

இந்தியாவில் இந்தாண்டு இயல்பை விட அதிக மழையை எதிர்பார்க்கலாம்: ஐஎம்டி

31st May 2022 03:16 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் இந்த ஆண்டு முன்னரே கணித்ததை விட அதிகளவு மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

இந்த பருவமழையில் சராசரி மழையின் அளவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் மிருத்யுஞ்சய மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறினார். 

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், 

ADVERTISEMENT

ஏப்ரல் மாதத்தில் 99 சதவீதம் இயல்பான மழையை பெற்றுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தாண்டு நல்ல மழைபொழிந்து வருகின்றது. மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் சராசரியாக 106 சதவீத மழையை எதிர்பார்க்கலாம். ஆனால், வடகிழக்குப் பகுதியில் இயல்பை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று அவர் கூறினார். 

கேரளத்தில் மே 29 அன்று பருவமழை தொடங்கும் என்று ஐஎம்டி கணித்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னதாக பருவமழை தொடங்கியது. 

தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இந்தாண்டு இயல்பை விட அதிகளவில் மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT