இந்தியா

பாஜகவில் ஜூன் 2-ல் இணைகிறார் ஹார்திக் படேல்

31st May 2022 01:20 PM

ADVERTISEMENT

காங்கிரஸில் இருந்து விலகியுள்ள ஹார்திக் படேல் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை ஹார்திக் படேல் இன்று தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாநில செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த மே 19ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் தைரியமாக ராஜிநாமா செய்திருக்கிறேன். என்னுடைய முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக இம்மாத தொடக்கத்திலேயே சுட்டுரை பக்கத்தில் 'குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்' பதவியையும் 'கை' சின்னத்தையும் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT