இந்தியா

கர்நாடகத்தில் அசுத்தமான குடிநீர் விநியோகம்: ஒருவர் பலி, 62 மருத்துவமனையில் அனுமதி 

31st May 2022 04:43 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் அசுத்தமான குடிநீரை உட்கொண்டதால் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 23 குழந்தைகள் உள்பட 62 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ராய்ச்சூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கண்காணிப்பாளர் மருத்துவர் பாஸ்கர் கூறியதாவது, 

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக 62 பேர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மே 29 அன்று, இந்திராநகரில் வசிக்கும் 40 வயதான மல்லம்மா கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. 

ராய்ச்சூர் நகர மக்கள் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யாத அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். 

மேலும், ராம்பூர் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்ட வார்டுகளில் மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும்  உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக மாநில அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், மாநகராட்சி அசுத்தமான குடிநீரை விநியோகம் செய்து வருகிறது.

மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT