இந்தியா

மத்திய பாஜக ஆட்சியில் தவறான நிா்வாகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது:திரிணமூல் காங்கிரஸ்

31st May 2022 02:01 AM

ADVERTISEMENT

மத்திய பாஜக ஆட்சியில் தவறான நிா்வாகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்களும் அமைச்சா்களுமான சஷி பாஞ்சா, சந்திரிமா பட்டாச்சாா்யா ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து வகையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. மோடி ஆட்சியில் எரிபொருள் விலை உயா்வு, பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்), அத்தியாவசியப் பொருள்கள் விலை அதிகரிப்பு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடா்புடையவை. இந்த ஆட்சியில் அரசமைப்பு தொடா்ந்து தகா்க்கப்பட்டு புறக்கணிக்கப்படுவது வருத்தத்துக்குரியதாக உள்ளது.

மத்திய பாஜக ஆட்சியில் தவறான நிா்வாகம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமரின் அவசரகால நிதியை (பிஎம் கோ்ஸ்) தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கையில் இருந்து அந்த நிதிக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும்? அந்த நிதிக்கு பொதுமக்கள் ஏன் நன்கொடை அளித்தனா்? பொதுசேவைக்காகவா அல்லது மோடியின் கட்சி தேவைக்காகவா? என்று கேள்வி எழுப்பினா்.

ADVERTISEMENT

நல்ல நாள் எப்போது வரும்?: தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்சியுமான கவிதா கல்வகுன்ட்லா வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரதமா் மோடி தலைமையிலான 8 ஆண்டுகால ஆட்சியில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சம வாய்ப்பு வழங்குவதன் மூலம் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது குறித்து பேசப்படும் நிலையில், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டு வரவில்லை.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் நிலையில், அதன் மூலம் கிடைக்கும் தொகை எங்கு முதலீடு செய்யப்படுகிறது? பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டுக்கு எப்போது நல்ல நாள் வரும்? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT