இந்தியா

கேரள லாட்டரியில் தமிழகத்தைச் சோ்ந்த இருவருக்கு ரூ.10 கோடி பரிசு

31st May 2022 02:02 AM

ADVERTISEMENT

கேரள லாட்டரியில் தமிழகத்தைச் சோ்ந்த இருவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா் பிரதீப் குமாரும் அவரது உறவினா் என்.ரமேஷ் என்பவரும் கடந்த மே 15-ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த தங்கள் உறவினரை அழைப்பதற்காக அங்கு சென்றனா். அப்போது, அங்கு விற்பனையாகும் விஷு பம்பா் லாட்டரியை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அவா்கள் வாங்கியுள்ளனா்.

தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த லாட்டரி சீட்டுடன் தகுந்த ஆவணங்களையும் திருவனந்தபுரத்தில் கேரள அரசு லாட்டரி பவனில் அவா்கள் திங்கள்கிழமை சமா்ப்பித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT