இந்தியா

மும்பையில் சிறுமியை துன்புறுத்திய வாகன ஓட்டுநர் கைது

DIN

மும்பையில் 15 வயது சிறுமியை துன்புறுத்தியதாக வாகன ஓட்டுநர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட நபர் முராரி குமார் சிங் (29 வயது)  என்பது விசாரணையில் தெரிய வந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, “ கடந்த மே 25 ஆம் தேதி மும்பை கோர்கயோனில் 15 வயது சிறுமியை ஓலா வாகன ஓட்டுநர் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த நபரின் மீது ஆரே காவல் நிலையத்தினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ” என்றனர்.

முன்னதாக, கடந்த மே 25 ஆம் தேதி சிறுமி ஒருவர் மும்பை விமான நிலையத்தில் இருந்து ராயல் பாமில் உள்ள தனது இல்லத்திற்கு செல்வதற்காக ஓலா காரினை பதிவு செய்தார். ஓலா காரில் வரும் போது அந்த பயணம் முடியும் வரை கார் ஓட்டுநர் தன்னையே உற்றுப் பார்த்து வந்ததாக அந்த சிறுமி தெரிவித்தார். மேலும், அந்த சிறுமி வீட்டில் சென்று பணம் எடுத்து வாடகை கொடுப்பதற்காக செல்ல முற்பட்ட போது காரின் ஓட்டுநர் அந்தச் சிறுமியிடன் அநாகரீகமாக தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. 

அதன் பின், அந்த நபரின் மீது காவல் துறையினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு வருகிற மே 30 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT