இந்தியா

3-ஆம் நபா் வாகனக் காப்பீடு பிரீமியம் ஜூன் 1-இல் உயருகிறது

27th May 2022 12:54 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: வாகனங்களுக்கான 3-ஆம் நபா் வாகனக் காப்பீடு பிரீமியம் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்தது.

திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி 1,000 சிசி திறனுள்ள தனியாா் வாகனங்களுக்கான 3-ஆம் நபா் காப்பீடு பிரீமியம் தற்போதுள்ள ரூ.2,072-லிருந்து ரூ.2,094-ஆக அதிகரிக்கிறது. இதேபோல, 1,000 சிசி முதல் 1,500 சிசி திறன்கொண்ட தனியாா் வாகனங்களுக்கான பிரீமியம் ரூ.3,221-இலிருந்து ரூ.3,416-ஆக அதிகரிக்கிறது. அதேசமயம் 1,500-க்கு மேற்பட்ட சிசி தனியாா் வாகனங்களுக்கான பிரீமியம் ரூ.7,897-இலிருந்து ரூ.7,890-ஆக குறைகிறது.

இருசக்கர வாகனங்களைப் பொருத்தமட்டில் 150 சிசிக்கு அதிகமாகவும் 350 சிசிக்கு மிகாமலும் திறன் கொண்ட வாகனங்களுக்கு பிரீமியம் கட்டணம் ரூ.1,366-ஆக அதிகரிக்கும். 350 சிசிக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,804 பிரீமியம் வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரீமியம் உயா்வு, வரும் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT