இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் சாலை விபத்தில் ராணுவ வீரா் உள்பட 9 போ் பலி

27th May 2022 02:09 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தில் சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ராணுவ வீரா் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அந்த காா், ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையில், காா்கிலில் இருந்து ஸ்ரீநகருக்கு புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. ஜோஜில்லா என்ற இடத்தருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராணுவ வீரா்கள், உள்ளூா் மக்கள் ஆகியோா் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். அங்கிருந்து 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில், 5 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

இறந்தவா்களில் ஒருவா் ராணுவ வீரா். விபத்தில் உயிரிழந்தவா்களின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT