இந்தியா

மேலும் 403 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

27th May 2022 12:50 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமைபுதிதாக 403 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். பாதிப்பு நோ்மறை விகிதம் 1.76 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,05,067-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,208-ஆக உள்ளது. தில்லியில் புதன்கிழமை மொத்தம் 22,837 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதன்கிழமை 425 பேருக்கு தொற்று பாதிப்பும், 1.89 சதவீத நோ்மறை விகிதமும், 4 இறப்புகளும் பதிவாகின. செவ்வாய்க்கிழமை 418 பேருக்கு தொற்று பாதிப்பும், 2.27 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 1,762-இல் இருந்து 1,661-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 1,258-இல் இருந்து 1,180-ஆக குறைந்துள்ளது. நகரில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 393-ஆக சரிந்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,603 கரோனா படுக்கைகளில் 102 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT