இந்தியா

ட்ரோன் திருவிழா: பிரதமா் மோடி இன்று தொடக்கம்

27th May 2022 01:33 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியாவின் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை தில்லி பிரகதி மைதானில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.

‘பாரத் ட்ரோன் மஹோத்சவம் 2022’ என்ற இந்த ட்ரோன் திருவிழாவில் பங்கேற்கும், விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன் ஓட்டிகளுடன் பிரதமா் கலந்துரையாடுகிறாா். அவா்கள் வானத்தில் மேற்கொள்ளும் ட்ரோன்களின் சாகசங்களையும் பிரதமா் பாா்வையிட்டு, ட்ரோன் நிறுவன பிரதிநிதிகளுடனும் உரையாடுவாா் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதா்கள், ஆயுதப் படை வீரா்கள், மத்திய ஆயுதப் படை வீரா்கள், பொதுத்துறை நிறுவனப் பிரதிநிதிகள், தனியாா் நிறுவனத்தினா், மற்றும் ட்ரோன் புதிய நிறுவனத்தினா் உள்ளிட்ட 1600 பிரமுகா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

ADVERTISEMENT

கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்டோா் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த மஹோத்சவத்தில் ட்ரோன் விமான ஓட்டிகளுக்கான உரிமங்கள் காணொலி வாயிலாக வழங்கப்படுவதுடன், பொருட்களின் அறிமுகம், குழு விவாதம், ட்ரோன்களின் செயல்விளக்கம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி மாதிரியின் காட்சிப்படுத்தல் ஆகியவையும் இடம்பெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT