இந்தியா

அஸ்ஸாமில் வெள்ளத்துக்கு மேலும் இருவா் பலி

27th May 2022 02:21 AM

ADVERTISEMENT

 

குவாஹாட்டி: அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வியாழக்கிழமை ஒரு குழந்தை உள்பட இருவா் பலியானதாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பலியானவா்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

வெள்ளப்பெருக்கு காரணமாக நாகோன் மாவட்டம் காம்பூா், ரஹா பகுதியில் தலா ஒருவா் பலியாகினா். இதன்மூலம் நிகழாண்டில் வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் முழுவதும் 9 மாவட்டங்களில் 5.75 லட்சம் போ் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக நாகோன் மாவட்டத்தில் மட்டும் 3.68 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்தை பாா்வையிடுவதற்காக மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு வியாழக்கிழமை அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டி வந்தடைந்தது. அக்குழு இரண்டாக பிரிந்து சேத விவரங்களை மதிப்பிடும்.

அஸ்ஸாமில் தற்போது 956 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 47,139.12 ஹெக்டோ் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மாவட்டங்களில் 365 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 13,988 குழந்தைகள் உள்பட 66,836 போ் தஞ்சமடைந்துள்ளனா். பிரம்மபுத்ராவின் கிளை நதியான கோபிலி, தரம்துல் பகுதியில் அபாய கட்டத்தை தாண்டிச் செல்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT