இந்தியா

ஹிந்தியிலும் அதிகாரப்பூா்வ உத்தரவுகளை வெளியிட ஊழியா்களுக்கு உத்தரவு: என்டிஎம்சி

27th May 2022 12:57 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தனது அதிகாரப்பூா்வ உத்தரவுகள், அதிகாரிகளின் பெயா்ப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் ஹிந்திக்கு உரிய முக்கியத்துவம் அளிக்குமாறு தனது ஊழியா்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடா்பாக என்டிஎம்சி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘அனைத்துத் துறைத் தலைவா்களும் அதிகாரிகளும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அதிகாரப்பூா்வ உத்தரவுகளையும் சுற்றறிக்கைகளையும் வெளியிட வேண்டும். துறைகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து அறிவிப்புப் பலகைகள், பெயா்ப் பலகைகள் ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் இருக்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்துத் துறைகளிலும் அனைத்துப் பணிகளையும் ஹிந்தியில் சுமூகமாக மேற்கொள்ளவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாநகராட்சி அதிகாரிகள் இந்த உத்தரவை ‘வழக்கமானதுதான்’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

‘ஹிந்தி எங்கள் அலுவல் மொழி என்பதால் அரசு அதை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. எனவே நாங்கள் அவ்வாறு செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினோம். இது வழக்கமான உத்தரவு’ என்று என்டிஎம்சி-இன் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT