இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காவலர் ஒருவர் வீர மரணம்

26th May 2022 01:54 PM

ADVERTISEMENT

 

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள க்ரீரியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர், காவலர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், "குப்வாரா, ஜுமாகுண்ட் கிராமத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி குறித்து குப்வாரா காவல்துறை உருவாக்கிய குறிப்பிட்ட உள்ளீட்டின் அடிப்படையில், ஊடுருவிய பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் காவல்துறை தடுத்து நிறுத்தியபோது என்கவுன்டர் தொடங்கியது" என்று போலீசார் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், "குப்வாரா, ஜுமாகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில்,  அங்கு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும், ராணுவ வீரர்களும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். 

ADVERTISEMENT

இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்திக்கொண்டே தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் நுழைந்தபோது, அவர்கள் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர், காவலர் ஒருவர் வீர மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க | கர்நாடக காங். தலைவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ADVERTISEMENT
ADVERTISEMENT