இந்தியா

நாட்டில் புதிதாக 2,628 பேருக்கு கரோனா பாதிப்பு

26th May 2022 09:18 AM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,628 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று 2,124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று குறைவாக பதிவாகியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,628 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,31,44,820ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2,167 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 4,26,04,881 நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க |  மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு

சிகிச்சைப் பலனளிக்காமல் மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 15,414 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT