இந்தியா

சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

DIN

விசா மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வியாழக்கிழமை ஆஜராகியுள்ளார்.

விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து புதன்கிழமை தில்லி திரும்பிய கார்த்தி சிதம்பரம் இன்று காலை சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விசா மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தின் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT