இந்தியா

இப்போதும் காங்கிரஸ் சித்தாந்தம்தான்: கபில் சிபல்

25th May 2022 09:29 PM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள மூத்த தலைவர் கபில் சிபல் தற்போதும் காங்கிரஸ் சித்தாந்ததையே கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில் சிபல் அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 16-ம் தேதி ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக அவர் இன்று (புதன்கிழமை) வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்கு சமாஜவாதி கட்சி ஆதரவளிக்கிறது. இதனால், வேட்புமனுத் தாக்கலின்போது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடனிருந்தார்.

இதையும் படிக்கசொன்னபடி செய்தார் கபில் சிபல்!

இருந்தபோதிலும், தான் சமாஜவாதியில் இணையவில்லை என்பதை கபில் சிபல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது குறித்து கபில் சிபல் கூறியதாவது:

"அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா எனும் காங்கிரஸின் சித்தாந்தத்தை நாங்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறோம் என்பதை நான் இப்போதும் கூறுகிறேன். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம் இது. இதன் அடிப்படையிலேயே நாங்கள் முன்னோக்கி செல்ல இருக்கிறோம்.

தலைவர்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் சுதந்திரத்தைத் தராது. இது இந்திய நாடாளுமன்றத்தின் துயரம். உலகம் முழுவதிலும் எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கொறடா எனும் நடைமுறையே கிடையாது. நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதை வெளிப்படுத்த முடியாது. ஒரு கட்சியில் இருப்பதால் அதற்குக் கட்டுப்பட்டு இருப்போம்" என்றார் அவர்.

Tags : kapil sibal
ADVERTISEMENT
ADVERTISEMENT