இந்தியா

உ.பி,யில் 12-14 வயதுடைய 90 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி

25th May 2022 05:30 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் 12-14 வயதுக்குட்பட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, 

இது மற்றொரு மைல்கல்,  நாட்டில் தடுப்பூசி இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் 12 முதல் 17 வயது வரை உள்ள அனைத்து சிறார்களுக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதுவரை மாநிலத்தில் 15-17 வயதுடைய  2,41,42,318 சிறார்களுக்கும், 12-14 வயதுடைய 91,31,512 சிறார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் செலுத்தப்பட்ட 192 கோடி தடுப்பூசிகளில் குறைந்தது 32.46 கோடி உ.பி.யைச் சேர்ந்தவையாகும். 

மாநிலத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தவும், உ.பி.யில் தடுப்பூசி அளவுகள் போதுமான அளவு கிடைப்பதையும், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்குவிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT