இந்தியா

தில்லி திரும்பினார் மோடி: ஜப்பான் பயணம் நிறைவு

25th May 2022 08:16 AM

ADVERTISEMENT

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை அதிகாலை பிரதமர் நரேந்திர மோடி தில்லி வந்தடைந்தார்.

ஜப்பானில் நடைபெற்ற நான்காவது க்வாட் அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி திங்கள்கிழமை சென்றார்.

க்வாட் மாநாட்டில் பங்கேற்ற மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த மாநாட்டில், பிராந்திய அமைதி, சர்வதேச பிரச்னை, பயங்கரவாத எதிர்ப்பு, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆலோசனை நடத்தப்பட்டு, கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 குழந்தைகள் பலி

முன்னதாக, ஜப்பான் தொழிலதிபர்களை தனித்தனியாக சந்தித்த மோடி, முதலீடுகள் குறித்து அவர்களுடன் விவாதித்தார். தொடர்ந்து ஜப்பான் வாழ் இந்தியர்களுடனும் கலந்துரையாடினார்.

இரண்டு நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை பாலம் விமானப் படை தளத்திற்கு வந்து சேர்ந்தார்.

இதையும் படிக்க | ஆக்கபூா்வ வழியில் ‘க்வாட்’ பயணிக்கிறது

தொடர்ந்து, நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT