இந்தியா

இந்தாண்டு காங்கிரஸிலிருந்து விலகிய ஐந்து முக்கிய தலைவர்கள்

25th May 2022 04:44 PM

ADVERTISEMENT

புது தில்லி: இந்த ஆண்டில் காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஐந்தாவது  நபர் கபில் சிபல் ஆவார். காங்கிரஸிலிருந்து விலகி, உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆதரவுடன்,  மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சுனில் ஜாகர் காங்கிரஸிலிருந்து  விலகி பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என். சிங்கும் காங்கிரஸிலிருந்து விலகினர். சமீபத்தில் குஜராத் காங்கிரஸின் செயல் தலைவரான ஹர்திக் படேலும் காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

"காங்கிரஸில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டேன். இதன்பிறகு காங்கிரஸை பற்றி கூறுவது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். 30-31 ஆண்டுகள் உறவிலிருந்து வெளியே வருவது எளிதானதல்ல" செய்தியாளரிடம் பேசிய கபில் சிபல் கூறினார்.

ADVERTISEMENT

முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், கட்சித் தலைமையின் மீது கடும் அதிருப்தி அடைந்து, "கடந்த பல மாதங்களாக அசௌகரியமாகவும், ஆதரவற்றவராகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் இருந்ததால், இப்போது கட்சிக்கு நான் தேவை இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதனால், ஒதுங்கி கொள்கிறேன்" என்று கூறினார்.

அதேபோல், ஆர்.பி.என். சிங், உ.பி., தேர்தலுக்கு முன், காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்,  காந்திக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட ஜிதின் பிரசாதா உள்ளிட்ட பலர் காங்கிரஸிலிருந்து விலகினர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT