இந்தியா

பெங்களூருவில் பல இடங்களில் 'சாரி' என எழுதிய மர்ம நபர்களை தேடும் காவலர்கள்

25th May 2022 05:44 PM

ADVERTISEMENT


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வளாகம் முழுவதும் சிவப்பு நிற பெயிண்டால் 'சாரி' என்று எழுதிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெங்களூருவின் சன்கடகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் முழுவதும் சாரி என எழுதப்பட்டிருப்பதைப் பார்த்த பொதுமக்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இது குறித்து யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இதில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஓரிடத்தில் இருந்த சிசிடிவி காட்சியில், இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வருகிறார்கள். உணவு விநியோகம் செய்யும் நபர்கள் வைத்திருப்பதைப் போன்ற பெரிய பையிலிருந்து அவர்கள் ஒரு பக்கெட்டை எடுத்து, சாரி என்று எழுதுவது பதிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT