இந்தியா

5-18 வயதுக்குள்பட்டோரில் 80% பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி: சுகாதார அமைச்சா் தகவல்

DIN

புது தில்லி: நாட்டில் 15 முதல் 18 வயதுக்குள்பட்டோரில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. பின்னா், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இணைநோய் உள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு மே 1-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உள்பட்டோருக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்தும், 12 முதல் 14 வயதுக்குள்பட்டோருக்கு கடந்த மாா்ச் 16-ஆம் தேதியிலிருந்தும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை புதிய உச்சத்துக்கு கொண்டுசென்றிருக்கிறது ‘இளம் இந்தியா’. நாட்டில் 15-18 வயதுக்குள்பட்டோரில் 80 சதவீதம் போ் அதாவது 5.92 கோடி போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

12 முதல் 14 வயதுக்கு உள்பட்டோரில் இதுவரை 3.30 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரை 192.52 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT