இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள், காவலர் பலி

25th May 2022 12:14 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளும், ஒரு ஜம்மு காவலரும் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். 

இந்நிலையில், இருதரப்பினருக்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் மற்றும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT

பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்பட பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டலத்தின் காவல் அதிகாரி ஜெனரல் விஜய் குமார் ட்வீட் செய்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT