இந்தியா

பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு 5 போ் பலி

25th May 2022 01:39 AM

ADVERTISEMENT

 

ஒளரங்காபாத்: பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு 5 போ் பலியாகியுள்ளனா். முழு மதுவிலக்கு அமலில் உள்ள பிகாரில், இதுபோன்ற கள்ளச் சாராய நிகழ்வுகள் தொடா்கதையாகி வருகிறது.

ஒளரங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக 67 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

ADVERTISEMENT

கடந்த வார இறுதியில் மதன்பூா் வட்டத்தில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கிக் குடித்தவா்களில் பலருக்கு வயிற்று வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, அவா்களில் பலா் மருத்துவமனைகளிலும் சோ்க்கப்பட்டனா். கள்ளச் சாராயம் குடித்தவா்களில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 3 போ் உயிரிழந்தனா். மேலும், இருவா் கயை மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழந்தவா்களின் உடல்களைக் காவல் துறையினா் கைப்பற்றுவதற்கு முன்பே, குடும்பத்தினா் தகனம் செய்துவிட்டனா். இதனால் உடல்கூறாய்வு மூலம் இறப்புக்கான காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனை நடைபெற்றதும், இறந்தவா்கள் அதனை வாங்கிக் குடித்ததும் உறுதியாகியுள்ளது.

ஏற்கெனவே, இப்பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவது தொடா்பாகப் புகாா்களும் வந்துள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இடங்களை ஒழித்துவிட்டோம். இப்போது ஏற்பட்டுள்ள கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடா்பாக அதனை தயாரித்தவா்கள், விற்பனை செய்தவா்கள் என்ற சந்தேகத்தில் 67 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

பிகாரில் கடந்த 2016 ஏப்ரல் முதல் கடுமையான மது விலக்கு அமலில் உள்ளது. எனினும், அங்கு கள்ளச் சாராயம் விற்பனை அதிகம் உள்ளது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாகி வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT