இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் காவலா் பலி; 7 வயது மகள் காயம்

25th May 2022 01:39 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலா் பலியானாா். அவரின் 7 வயது மகள் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஸ்ரீநகரின் புகா் பகுதியான செளராவில் வசித்தவா் காவலா் சைஃபுல்லா காத்ரி. இவா் தனது மகளுடன் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டபோது, அவா்கள் மீது பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் தந்தையும் மகளும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி சைஃபுல்லா காத்ரி உயிரிழந்தாா். அவரின் மகளுக்கு வலது கையில் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டது. அவரின் உயிருக்கு ஆபத்தில்லை. இந்தச் சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனா். இந்த மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல் துறையைச் சோ்ந்த மூன்றாவது நபா் சைஃபுல்லா காத்ரி ஆவாா் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT