இந்தியா

உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளுக்கு வயது நிா்ணயம்: பிசிசிஐ-க்கு எதிரான மனு நிராகரிப்பு

25th May 2022 01:32 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளுக்கான வயது வரம்பை முடிவுசெய்ய கட்-ஆப் தேதியை நிா்ணயிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பிசிசிஐ) உத்தரவிடக் கோரி மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆட்டங்களில் விளையாடி வரும் ரித்விக் ஆதித்யா என்ற கிரிக்கெட் வீரா், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பிசிசிஐ வெளியிட்டுள்ள விளம்பரத்தின்படி, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பிறந்தவா்கள் மட்டுமே உள்ளூா் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும். ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பிறந்தவா்கள் பங்கேற்க இயலாது.

ADVERTISEMENT

எனவே, உள்ளூா் போட்டிகளில் பங்கேற்பதற்கான வயதை நிா்ணயிக்கும் தேதியை செப்டம்பா் 1-இல் இருந்து ஏப்ரல் 1-க்கு மாற்றுமாறு பிசிசிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஏ.நஸீா், பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த விவகாரங்கள் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை. பிசிசிஐயிடம் முறையிட்டு தீா்வுபெறலாம் என்பதால் இந்த மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இதையடுத்து, மனுதாரா் தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT