இந்தியா

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி

25th May 2022 03:35 AM

ADVERTISEMENT


புலந்த்ஷஹர்: உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷஹர்-மீரட் நெடுஞ்சாலையில் குலாவதி பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காய
மடைந்தனர். 
உத்தராகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலுக்கு அந்தக் குடும்பத்தினர் காரில் சென்றபோது லாரியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஹார்திக் (6), வன்ஷ் (5), ஷாலு (21), ஹிமான்ஷு (25), பரஸ் (22) ஆகிய 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்
துள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT