இந்தியா

ஜெய்ப்பூரில் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் சடலமாக மீட்பு

24th May 2022 02:47 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கர்தானி பகுதியில் பல குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயது இளைஞர் இறந்து கிடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இறந்தவர் சன்னி சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது எதிரிகளால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

இன்று காலை சன்னிசோனியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நேற்றிரவு முதல் அவரை காணவில்லை என்று தெரிய வந்தது. 

சோனி மீது திருட்டு மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முதல்கட்ட விசாரணையில் அவருக்கு வேண்டாதவர்கள் நேற்றிரவு அவரை கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என போலீசார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT