இந்தியா

தேர்தல் 2024 வியூகம்: ப. சிதம்பரம், ஜோதிமணி அடங்கிய குழுக்களை அமைத்தது காங்கிரஸ்

24th May 2022 01:22 PM

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தலுக்கு தயாராக காங்கிரஸ் தரப்பில் மூன்று குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே ஆட்சியிலிருந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் மே 13ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ நடத்தப்பட்டது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு, யாத்திரை ஒருங்கிணைப்பு குழு ஆகிய மூன்று குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க |  மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?

அரசியல் விவகாரக் குழு

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, திஜ்விஜய சிங், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜித்தேந்திர சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழு

ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரை ஒருங்கிணைப்புக் குழு(பாரத ஜோடோ யாத்திரை)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் நடத்தும் பாதை யாத்திரையை ஒருங்கிணைக்கும் திட்டமிடல் குழுவில், சச்சின் பைலட், சசி தரூர், ஜோதிமணி உள்ளிட்ட 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT