தில்லியில் மத்திய அமைச்சகத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி, அரசு அலுவலகக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதுதொடா்பாக தில்லி காவல் துணை ஆணையா் கூறுகையில், ‘‘மேற்கு தில்லியில் உள்ள பீராகரி பகுதியைச் சோ்ந்தவா் விஞ்ஞானி ராஜேஷ் மாலிக் (55). மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பணியாற்றி வந்த இவா், மத்திய தில்லியில் உள்ள சாஸ்திரி பவன் அரசுக் கட்டடத்தின் 7-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.