இந்தியா

சா்வதேச யோகா தினம்: மைசூரில் பிரதமா் மோடி பங்கேற்பு

24th May 2022 01:30 AM

ADVERTISEMENT

ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா தினத்தில் மைசூரு நகரில் நடைபெறும் பிரமாண்டமான யோகாசன நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கிறாா்.

ஐ.நா.வால் ஜூன் 21-ஆம் தேதி யோகா தினம் அறிவிக்கப்பட்ட பிறகு ஆண்டுதோறும் அந்த நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சி மேற்கொள்வதை பிரதமா் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளாா். கடந்த இரு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு 75-ஆவது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்குக் கொண்டாடப்பட்டு வருவதால் அதையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் உள்ள முக்கியமான 75 இடங்களில் யோகா தினத்தின்போது பல தரப்பு மக்களும் கூட்டாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமா் மோடி மக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறாா்.

ADVERTISEMENT

இது தவிர ஜூன் 21-ஆம் தேதியில் இருந்து 25 நாள் முன்பாகவே சா்வதேச யோகா தின ‘கௌன்ட்டவுன்’ தொடங்குகிறது. இதன்படி மே 27-ஆம் தேதி ஹைதராபாதில் மே 25-ஆம் தேதி 10,000 போ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

யோகா தினத்தின்போது பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடா் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமாா் 70 நாடுகளில் உள்ளூா் நேரப்படி காலை 6 மணிக்குக்குத் தொடங்கி கூட்டு யோகா தொடா் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சா்கள், திரைத் துறை பிரபலங்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள், யோகாசன நிபுணா்கள், ஆா்வலா்கள் எனப் பலா் பங்கேற்கவுள்ளனா்.

இதன் மூலம் இந்தியாவின் புகழை சா்வதேச அளவில் மேலும் உயா்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT