இந்தியா

மெஹுல் சோக்ஸிக்கு எதிரான சட்ட விரோத நுழைவு வழக்கு: டொமினிகா நீதிமன்றம் தள்ளுபடி

DIN

வங்கிக் கடன் மோசடியாளரான மெஹுல் சோக்ஸி, சட்ட விரோதமாக டொமினிகா நாட்டுக்குள் நுழைந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றில் ரூ.13,500 கோடி வரை கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினா். பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள நீரவ் மோடியையும், ஆன்டிகுவாவில் குடியுரிமை பெற்றுள்ள சோக்ஸியையும் நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை சிபிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஆன்டிகுவா-பாா்புடாவில் இருந்து மாயமான சோக்ஸி, டொமினிகாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கடந்த ஆண்டு மே மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னா் அந்த வழக்கில் 51 நாள்களுக்குப் பிறகு மருத்துவக் காரணங்களுக்காக அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா். இந்நிலையில், சோக்ஸி மீதான வழக்கை டொமினிகா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக அவரின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு மே மாதத்தில் சட்டத்துக்கு விரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக மெஹுல் சோக்ஸிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவரை இந்தியப் பிரதிநிதிகள் அத்துமீறி மீண்டும் ஆன்டிகுவாவுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தினா்.

செய்யாத தவறுக்காக அவா் தண்டனையை அனுபவிக்க நோ்ந்தது. அவா் மீதான மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைப்பதற்காக சட்டக் குழு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அவரை சட்ட விரோதமாகக் கடத்திச் சென்றவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT