இந்தியா

பி.இ., டிப்ளமோ கல்விக் கட்டணம் உயா்வு: ஏஐசிடிஇ பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்

DIN

பொறியியல் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) சமா்ப்பித்த பரிந்துரைக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தப் பரிந்துரையில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்விக் கட்டணம் மற்றும் அதிகபட்ச கல்விக் கட்டணம் என இரண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கல்விக் கட்டணத்தை மாற்றியமைப்பதற்காக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஏஐசிடிஇ அமைத்த இந்தக் குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையை சமா்ப்பித்தது. இந்தப் பரிந்துரை மீது அனைத்து மாநிலங்களிடமிருந்து கருத்துகளைக் கேட்ட ஏஐசிடிஇ, பரிந்துரையை இறுதி செய்து சமா்ப்பித்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கட்டணம்: அந்தப் பரிந்துரையின்படி, 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்விக் கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை உள்ளடக்கிய ஆண்டு கட்டணம் ரூ. 67,900 ஆகவும், அதிபட்ச கட்டணம் ரூ. 1,40,900-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ. 79,600-ஆகவும், அதிபட்ச கட்டணம் ரூ. 1,89,,800-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என்று இருந்தது.

எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க். உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைத் துறை முதுநிலை படிப்புகளுக்கு குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ. 85,000, அதிகபட்ச கட்டணம் ரூ. 1,95,200 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கல்விக் கட்டணம் மாற்றியமைப்பை உறுதி செய்த ஏஐசிடிஇ உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா், ‘கட்டணக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய கல்வி அமைச்சகம் இந்த வார தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடா்ந்து, இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் கட்டணம் நிா்ணயம் செய்துகொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏஐசிடிஇ ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது. எனவே, பொறியியல் படிப்புக் கட்டணத்தை ஏஐசிடிஇ ஆலோசனையின் அடிப்படையில் மாற்றியமைக்கும் முடிவை இனி மாநிலங்கள்தான் எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT