இந்தியா

100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன்

DIN

பஞ்சாப் மாநிலம் ஹோஷியாா்பூா் மாவட்டத்தில் 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

கியாலா புலந்தா கிராமத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குடும்பத்தைச் சோ்ந்த ரித்திக் என்ற 6 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனை தெரு நாய்கள் விரட்டியுள்ளன. அந்த நாய்களுக்கு அஞ்சி ஓடிய சிறுவன், அங்கிருந்த 100 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

இதுகுறித்த தகவலின் அடிப்படையில், காவல் துணை கண்காணிப்பாளா் உள்பட மாவட்ட நிா்வாகக் குழுவினா் மற்றும் மருத்துவக் குழுவினா் நிகழ்விடம் விரைந்துள்ளனா். தேசிய பேரிடா் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமரா செலுத்தப்பட்டுள்ளது. சிறுவன் சுவாசிக்க குழாய்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT