இந்தியா

தாமஸ் கோப்பை வெற்றி: கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு பிரதமர் பாராட்டு

DIN


தாமஸ் கோப்பையில் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்திய பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டினார்.

தாமஸ் கோப்பையை இந்திய அணி முதன்முறையாக கடந்த மே 15-ம் தேதி வென்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பையில் பாட்மிண்டன் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி, அவர்களுக்குப் பாராட்டி தெரிவித்தார்.

இந்திய அணி வழிநடத்தியபோது இருந்த மனநிலை குறித்து ஸ்ரீகாந்திடம் பிரதமர் மோடி கேட்டார். 

இதற்குப் பதிலளித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது:

"அனைவருமே நன்றாக விளையாடினர். இது அணியாக செயல்பட வேண்டிய போட்டி என்பதால், அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாக இருந்தது.

ஆட்டத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி எங்களுக்குள் சிறிய உரையாடல்கள் இருக்கும். அணியில் எல்லாருமே சிறப்பாக செயல்பட்டதால், கேப்டனாக நான் பெரிதும் செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை.

இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றது எனக்கு மகிழ்ச்சி. வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டியில் நான் விளையாட நேர்ந்தது மிக முக்கியமானது. இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு, என்னால் முடிந்தவற்றைக் கொடுக்க வேண்டும் என விரும்பினேன்" என்றார்.

பிறகு, 73 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் கோப்பையை வென்று தந்ததற்காக நாட்டின் சார்பாக பிரதமர் மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முன்னதாக, தாமஸ் கோப்பையை வென்ற தினமே பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இந்திய அணியினருடன் உரையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT