இந்தியா

பஞ்சாபில் 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன்

22nd May 2022 05:39 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பஞ்சாப் மாநிலம், ஷோஷியார்பூர் அருகே கியாலா கிராமத்தில் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை சில தெருநாய்கள் இன்று துரத்தியுள்ளன. உடனே அந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளான். அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக சணல் பையால் மூடப்பட்டிருந்த 100 அடி ஆழ்துறை கிணற்றில் விழுந்துள்ளான். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அதிகாரிகள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவசர சேவைக்காக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. இதனிடையே சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினரும் விரைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- விலை குறைக்காமல் காரணம் கூறும் திமுக அரசு: அண்ணாமலை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், குழந்தையை மீட்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். இவ்வறு அவர் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT