‘ஜிபாட்’ நுழைவுத் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டது.
இந்தியாவில் முதுநிலை பாா்மசி படிப்புகளில் சேர ‘ஜிபாட்’ என்ற பட்டதாரி பாா்மசி தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வு ஆண்டுதோறும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் கணினிவழியில் நடத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான ஜிபாட் தோ்வு கடந்த ஏப். 9-இல் நடைபெற்றது. இந்தத் தோ்வை நாடு முழுவதும் 336 மையங்களில் 50,508 பட்டதாரிகள் எழுதினா்.
தோ்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.