இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு அமலுக்கு வந்தது

21st May 2022 12:58 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்த ஆணையத்தின் இரு உத்தரவுகளும் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் 62(2),(3)-ஆவது பிரிவுகளின்படி, மறுசீரமைப்பு ஆணையம் மாா்ச் 14, மே 5 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய அரசு மே 20-ஆம் தேதி முதல் அமல்படுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு ஆணையம் மாா்ச் 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் வெவ்வேறு பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும், மே 5-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் ஒவ்வொரு தொகுதியின் அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரில் இனி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள 83 சட்டப்பேரவைத் தொகுதிகள், 90 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 37 தொகுதிகளை 43 தொகுதிகளாகவும், காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 46 தொகுதிகளை 47 தொகுதிகளாகவும் மறுசீரமைப்பு ஆணையம் பிரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT