இந்தியா

மே 23-ல் ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

21st May 2022 06:18 PM

ADVERTISEMENT

ஜப்பான் பிரதம்ர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 23, 24ஆம் தேதிகளில் ஜப்பான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

ஜப்பான் செல்லும் அவர் 24ஆம் தேதி நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து அமெரிக்க அதிபர், ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் மோடி பேசுகிறார். அங்கு வசிக்கும இந்தியர்களையும் சந்திக்கும் பிரதமர் மோடி, ஜப்பான் நிறுவனங்களின் தலைவர்களுடனும் கலந்துரையாடுகிறார். 

இதையும் படிக்க- 1.83 லட்சம் பேர் குரூப் 2 தேர்வு எழுதவில்லை

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. இதில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : Japan pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT