இந்தியா

பெகாஸஸ் உளவு விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்

DIN

பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் நியமித்தது. அந்தக் குழுவில், தொழில்நுட்ப நிபுணா், நீதிபதி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: உளவு பாா்க்கப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசிகளை விசாரணைக் குழுவின் தொழில்நுட்பப் பிரிவு ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுவின் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடையும். அதன்பிறகு 4 வாரங்களில் அனைத்து நடைமுறைகளும் முடிவடைய வேண்டும். அதைத் தொடா்ந்து விசாரணைக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யும். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலையில் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT